ரிக்கி பாண்டிங்  படம் | ஐசிசி
தற்போதைய செய்திகள்

ஐபிஎல் தொடரில் மட்டுமல்ல, டி20 உலகக் கோப்பையிலும் இவர்களது ஆதிக்கம் தொடரும்: ரிக்கி பாண்டிங்

நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் இருவர் டி20 உலகக் கோப்பையிலும் சிறப்பாக செயல்படுவார்கள் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

DIN

நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் இருவர் டி20 உலகக் கோப்பையிலும் சிறப்பாக செயல்படுவார்கள் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

17 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் மோசமாக விளையாடி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது. இருப்பினும், அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். 13 போட்டிகளில் விளையாடிய அவர் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதேபோல, பேட்டிங்கில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் டிராவிஸ் ஹெட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 15 போட்டிகளில் விளையாடிய அவர் 567 ரன்கள் குவித்தார்.

இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஜஸ்பிரித் பும்ரா மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் டி20 உலகக் கோப்பையிலும் ஆதிக்கம் செலுத்துவார்கள் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஜஸ்பிரித் பும்ரா

இது தொடர்பாக அவர் ஐசிசி ரிவ்யூவில் பேசியதாவது: நடப்பு ஐபிஎல் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா புதிய பந்தில் சிறப்பாக ஸ்விங் செய்தார். அவரது பந்துவீச்சில் வேகமும் இருந்தது. ஐபிஎல் தொடரின் முடிவில் அவரது எகானமி ரேட் ஓவருக்கு 7 ரன்களுக்கும் குறைவாக இருந்தது. அவர் விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். கடினமான ஓவர்களையும் வீசினார். டி20 கிரிக்கெட்டில் சவாலளிக்கும் விதமாக கடினமான ஓவர்களை வீசினால், உங்களுக்கு விக்கெட்டுகள் கிடைக்கும். அதனால், இந்த டி20 உலகக் கோப்பையில் ஜஸ்பிரித் பும்ரா ஆதிக்கம் செலுத்துவார்.

டிராவிஸ் ஹெட்

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் டிராவிஸ் ஹெட் 4-வது இடம் பித்தாலும், அவர் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. ஐபிஎல் தொடர் முழுவதும் அவரது ஸ்டிரைக் ரேட் கிட்டத்தட்ட 200 ஆகவே இருந்தது. டி20 உலகக் கோப்பையில் டிராவிஸ் ஹெட் அதிக ரன்கள் குவித்தவராக இருப்பார் என கணிக்கிறேன். அவர் வெள்ளைப் பந்து மற்றும் சிவப்பு பந்து போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அண்மைக் காலமாக அவர் துளியும் அச்சமின்றி பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஷாட்டுகளை விளையாடி வருகிறார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவினின் கிஸ் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

உ.பி.யில் ஜலாலாபாத் ஊரின் பெயர் பரசுராம்புரி என மாற்றம்!

புதுமண தம்பதிகளுக்கு இலவச பட்டுவேட்டி, பட்டுச் சேலை: இபிஎஸ் வாக்குறுதி!

சத்தீஸ்கர்: ரூ.30 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 8 நக்சல்கள் சரண்!

இந்தியா கூட்டணி கடைப்பிடிக்கும் ஒரே அரசியலமைப்பு, ஊழல் மட்டுமே - அண்ணாமலை

SCROLL FOR NEXT