தவெக தலைவா் விஜய் (கோப்புப்படம்) 
தற்போதைய செய்திகள்

தவெக செயற்குழுக் கூட்டம்: முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!

விஜய் தலைமையில் தவெக செயற்குழுக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

DIN

விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கட்சியின் அடுத்தகட்ட நகர்வு தொடர்பாக ஆலோசனை செய்வதற்காக, பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்று கட்சியை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும், உள்கட்டமைப்பு தொடர்பாகவும் ஆலோசனைகள் நடத்திவருவதாகக் கூறப்படுகிறது.

மேலும் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், மாதம் ஒருமுறை மின் கட்டண அளவீடு செய்யப்படும் என்று கூறிவிட்டு, அதை நடைமுறைப்படுத்தாமல் இருக்கும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், தவெக செயற்குழுக் கூட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த வாரம் நடந்து முடிந்த நிலையில், மாநாட்டில் விஜய் பேசிய கருத்துக்கு எதிர்வினையாற்றியுள்ள அரசியல் தலைவர்களின் விமர்சனங்கள் தொடர்பாகவும் விவாதிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடை போட நீயும்... சாக்ஷி அகர்வால்!

பூவே செம்பூவே... கரிஷ்மா தன்னா!

மயக்கும் மஞ்சள்... சிவாங்கி வர்மா!

பஹல்காம் தாக்குதல்: பிரிக்ஸ் கூட்டமைப்பு வெளியிட்ட புது அறிக்கை!

அபிஷேக் சர்மா - ஷாகின் ஷா அஃப்ரிடி இடையேயான போட்டி சுவாரசியமாக இருக்கும்: மோர்கெல்

SCROLL FOR NEXT