முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னை, புறநகர்ப் பகுதிகளில் மழை!

சென்னையில் பரவலாக மழை.

Updated On : 6 நவம்பர், 2024 at 10:42 AM
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை
பகிர்:

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று(நவ, 6) பிற்பகலில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அம்பத்தூர், ஆவடி, கோயம்பேடு, எழும்பூர், திருவல்லிக்கேணி, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அதேபோல், சென்னையின் புறநகர்ப் பகுதிகளான செங்குன்றம், தாம்பரம், பூந்தமல்லி, காட்டுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →