சேலம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது மோதி சாலை கவிழ்ந்து தீப்பற்றி எரியும் தனியார் ஆம்னி பேருந்து.  
தற்போதைய செய்திகள்

சேலம் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து தீப்பற்றி எரிந்தது

சேலம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது மோதி சாலை கவிழ்ந்த தனியார் ஆம்னி பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்துது. இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் ஒருவர் பலியானார்.

DIN

சேலம்: சேலம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது மோதி சாலை கவிழ்ந்த தனியார் ஆம்னி பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்துது. இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் ஒருவர் பலியானார்.

சேலம் சங்ககிரி பகுதியில் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஆம்னி பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பேருந்து கவிழ்ந்தவுடன் தீப்பற்றி எரிந்தது. நல்வாய்ப்பாக பேருந்தில் இருந்த 20-க்கும் மேற்பட்ட பயணிகளும் லேசான காயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இருசக்கர வாகனத்தில் வந்தவர் மோதிய நபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்ககிரி போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் கிரீன் சா்க்கிளில் மழை வெள்ளத்தால் போக்குவரத்து நெரிசல்

20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி காத்திருப்பு போராட்டம்!

பஜாஜ் வாகன விற்பனை 5% உயா்வு

அரசுப் பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டடம்: காணொலி மூலம் முதல்வா் அடிக்கல்!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக 265 மில்லியன் லிட்டா் குடிநீா் வழங்கும் திட்டம்!

SCROLL FOR NEXT