நவ. 12-ல் சென்னையில் மழை ஆரம்பம்! 
தற்போதைய செய்திகள்

நவ. 12 முதல் தீவிரமடையும் மழை! - பிரதீப் ஜான்

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைகிறது.

DIN

வரும் நவ. 12 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருப்பதாவது:

தமிழகத்தில் இன்று(நவ. 10) மழைக்கு வாய்ப்பில்லை. வரும் நவ. 12 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடைகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ஆரம்பிக்கும் இந்த முதல்கட்ட மழை, தொடர்ந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் தீவிரமடையும்.

வரும் நவ. 12 முதல் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, அடுத்த 36 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும் என்றும், இந்த புயல் சின்னம் மேற்கு திசையில், தமிழக - இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி நகரும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக, நவ.12 ஆம் தேதி சென்னை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT