பிக் பாஸ் - 8 நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி. 
தற்போதைய செய்திகள்

பிக் பாஸ் 8: இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்...

DIN

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

பிக் பாஸ் வீட்டில் ஆண்கள், பெண்கள் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பார்வையாளர்களின் சுவாரசியத்தைத் தூண்டும் வகையில் கடந்த வாரம் வைல்டு கார்டு மூலம் 6 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்கு வந்தனர்.

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் சிவக்குமார், பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சரி, ராயன், ராணவ், நாகப்பிரியா, வர்ஷினி ஆகியோர் வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்தனர்.

கடந்த வாரம் யாரும் வெளியேறாத நிலையில், இந்த வாரம் நடனக் கலைஞர் சுனிதா வெளியேற்றப்பட்டதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

இந்த வாரம் இரு போட்டியாளர்கள் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒருவர் மட்டுமே வெளியேறியுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஐந்து வாரங்களை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 20 போட்டியாளர்கள் உள்ளனர். வைல்டு கார்டு போட்டியாளர்கள் ஆட்டத்தை மாற்ற ஆரம்பித்துள்ளதால், நிகழ்ச்சி விறுவிறுப்படையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வாரங்களில் தயாரிப்பாளர் ரவீந்திரன், அர்ணவ், தர்ஷா குப்தா ஆகியோர் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.6% ஆக உயர்த்தி கணிப்பு: ஐஎம்எஃப்

குடும்பத்தாரின் அன்பை சோதிக்க இறந்தது போல நடித்த விமானப் படை வீரர்!

சிங்கப்பூரிடம் தோல்வி! ஏஎஃப்சி ஆசிய கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை நழுவவிட்ட இந்தியா!

இருளும் அழகே அவள் பார்வையில்... அனு!

ஆஸி. உடனான தோல்வியிலிருந்து இந்தியா வெளியே வரவேண்டும்: மிதாலி ராஜ்

SCROLL FOR NEXT