தற்போதைய செய்திகள்

சென்னையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்!

சென்னை பட்டினப்பாக்கத்தில் கரை ஒதுங்கிய டால்பின்.

DIN

சென்னை பட்டினப்பாக்கம் நொச்சிக்குப்பம் கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பினை வனத்துறையினர் இன்று மீட்டனர்.

சென்னை பட்டினப்பாக்கம் நொச்சிக்குப்பம் கடற்கரையில் மீனவர்கள் வழக்கம்போல் காலையில் பணிக்கு செல்லும்போது டால்பின் ஒன்று கரை ஒதுங்கி உள்ளது.

இதனைக் கண்டு மீனவர்கள் மற்றும் அப்பகுதி வாசிகள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, அவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன் பேரில், தீயணைப்புத் துறையினர் வந்து பார்வையிட்டு, டால்பின் இறந்ததை உறுதி செய்தனர். இந்த டால்பின் குளிர் பிரதேசங்களில் வாழக்கூடிய டால்பின் எனக் கூறப்படுகிறது.

தீயணைப்புத் துறையினர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்து டால்பினை எடுத்துச் சென்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டால்பின்கள் இறந்த நிலையில் அடிக்கடி கரை ஒதுங்குகின்றன. சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் இதற்கான காரணத்தை கண்டறிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும், மீனவா்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT