தற்போதைய செய்திகள்

கடைசி நாள் படப்பிடிப்பு... கண்கலங்கி அழுத சுந்தரி தொடர் நடிகர்கள்!

சுந்தரி தொடர் படப்பிடிப்பு நிறைவு.

DIN

சுந்தரி தொடர் 2 பாகத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

சுந்தரி தொடரின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அதே நடிகர்களை வைத்து சுந்தரி இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது.

முதல் பாகத்தில் கிராமத்துப் பெண், தன் கணவனால் ஏமாற்றப்பட்ட நிலையில் போராடி ஆட்சியராகிறார். இரண்டாம் பாகத்தில் ஆட்சியரான பிறகு கணவரின் மற்றொரு மனைவி குடும்பத்தை ஏற்றுக்கொண்டு சந்திக்கும் சவால்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், முன்னாள் மாவட்ட ஆட்சியர் வெற்றிச் செல்வனை, சுந்தரி திருமணம் செய்துபோல காட்சி அமைக்கப்பட்டு தொடரின் கதையை முடித்துள்ளனர்.

இத்தொடரின் இறுதிநாள் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்டக் காட்சிகள் அண்மையில் படமாக்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

சுந்தரி தொடர் இன்னும் சில நாள்களில் நிறைவடையவுள்ள நிலையில், கடைசி நாள் படப்படிப்பின்போது, சக நடிகர்களை பிரிவதை எண்ணி கண்கலங்கி அழுகின்றனர். இந்த விடியோவை இத்தொடரின் நடித்த ஜிஷ்ணு வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ளப் பதிவில், ”சுந்தரியை மிஸ் செய்வேன், இங்கு கற்ற அனைத்துப் பாடங்களையும் எடுத்துச் செல்வேன். நம்பமுடியாத 4 ஆண்டுகள் பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் என் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

இத்தொடர் தொடரின் இயக்குநர் இயக்கும் புது தொடரான ரஞ்சனி தொடர் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வத் தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-இஎஃப்டிஏ தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அமல்

அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்: உயா்நீதிமன்றத்தில் மனு

கபடி, கால்பந்துடன் தொடங்கியது முதல்வா்: கோப்பை மாநில போட்டிகள்

பிரிட்டன் யூத ஆலயத்தில் பயங்கரவாத தாக்குதல்

13 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT