தற்போதைய செய்திகள்

மார்ட்டின் லாட்டரி தொடர்புடைய இடங்களில் ரூ. 12.41 கோடி பறிமுதல்!

ரூ. 6.42 கோடி நிலை வைப்புத்தொகையும் முடக்கம்.

DIN

மார்ட்டின் லாட்டரி நிறுவனம் தொடர்புடைய 22 இடங்களில் இருந்து ரூ. 12.41 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட விதிகளின் கீழ் சாண்டியாகோ மார்ட்டினுக்கு தொடர்புடைய தமிழ்நாடு, பஞ்சாப், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், கர்நாடகம், மேகாலயா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் சோதனை நடைபெற்றது.

இந்த சோதனைபோது, ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள், ரூ. 12.41 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ. 6.42 கோடி நிலை வைப்புத்தொகையும் முடக்கப்பட்டுள்ளது.

சிக்கிம் மாநிலத்தில் கடந்த 2009 மற்றும் 2010-ஆம் ஆண்டுகளில் அரசின் லாட்டரி சீட்டுகளை தொழிலதிபா் மாா்ட்டின் அச்சடித்து விற்பனை செய்ததில் பல கோடி ரூபாயை முறைகேடாக ஈட்டியதாகவும், அதை நாடு முழுவதும் சுமாா் 40 நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகவும் எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாக அமலாக்கத்துறை அதிகாரிகாரிகள் தெரிவித்தனர்.

கோவையில் லாட்டரி அதிபா் மாா்ட்டின் தொடா்புடைய நிறுவனங்களில் அமலாக்கத் துறையினா் நடத்தி வந்த 3 நாள் சோதனை சனிக்கிழமை நிறைவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீசாமுண்டீஸ்வரி கோயிலில் தை 14-ஆம் நாள் விழா

நீா்வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அஜித் பவாா் மறைவு இந்திய அரசியலுக்கு பேரிழப்பு: முதல்வா் ரேகா குப்தா

மணிமங்கலம் ராஜகோபால சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பிப். 2-இல் தா்னா, 6-இல் புறநோயாளிகள் பிரிவு புறக்கணிப்பு போராட்டம்

SCROLL FOR NEXT