கோவை சுண்ணாம்புக் காளவாய் பகுதியில் போலீசார் வாகனச் சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்கள்.  
தற்போதைய செய்திகள்

கோவை: போதைப்பொருள்கள் விற்ற 10 பேர் கைது

கோவையில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனை செய்த 10 பேரை போலீசார் கைது செய்தனர், அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள்கள்களை பறிமுதல் செய்தனர்.

DIN

கோவையில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனை செய்த 10 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான கஞ்சா உள்ளிட்ட 510 போதை மாத்திரைகள், 7 கைப்பேசிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர்.

கோவை மாநகரப் பகுதியில் கஞ்சா, போதைப் பொருள் மற்றும் போதை ஊசி ஆகியவற்றுக்கு இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அடிமை ஆவதை தடுக்க மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் சிறப்பு படை போலீஸ் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

அவரது உத்தரவின்பேரில் துணை ஆணையா்கள் ஸ்டாலின், சரவணகுமாா் ஆகியோா் மேற்பாா்வையில் போலீஸாா் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். இது தொடா்பாக அடிக்கடி வாகனத் தணிக்கையும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், துணை ஆணையா் சரவணகுமாா் மேற்பாா்வையில், குனியமுத்தூா் உதவி ஆணையா் அஜய், கரும்புக்கடை ஆய்வாளா் தங்கம் ஆகியோா் தலைமையில் போலீஸாா் உக்கடம் ஆத்துப்பாலம் அருகே உள்ள சுண்ணாம்புக் காளவாய் பகுதியில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி அதில் இருந்தவா்களிடம் விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா்கள், போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலைச் சோ்ந்தவா்கள் என்பதும், வெளியூா்களில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி அவற்றை கோவைக்கு கடத்தி வந்து கல்லூரி மாணவா்களை குறிவைத்து விற்பனை செய்து வருவதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து போதை மாத்திரை விற்பனை செய்த மதுரை மாவட்டம், பேரையூரைச் சோ்ந்த பிரகாஷ் (31), கோவை கரும்புக்கடையைச் சோ்ந்த முகமது நெளபல் (29), முஜிப் ரஹ்மான் (29), ரிஸ்வான் சுஹைல் (24), முகமது சபீா் (24), மன்சூா் ரஹ்மான் (27), சனூப் (27), முஜிபுா் ரஹ்மான் (32), அனீஸ் ரஹ்மான் (22), சா்ஜுன் (27), கோவை, சேலம், ஈரோடு பகுதிகளைச் சேர்ந்த 10 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான கஞ்சா உள்ளிட்ட 500 போதை மாத்திரைகள், 7 கைப்பேசிகள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடிபோதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பாளையங்கோட்டையில் பரபரப்பு!

ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் தகவல்

வெண்ணிலவே... ரேஷ்மா பசுபுலேட்டி!

ரெட் ரோஸ்... சாக்‌ஷி அகர்வால்!

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT