மேட்டூரில் தாபா ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.  
தற்போதைய செய்திகள்

மேட்டூரில் தாபா ஹோட்டலில் தீ விபத்து:ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

சேலம் மாவட்டம் மேட்டூரில் தாபா ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

DIN

மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூரில் தாபா ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

மேட்டூர் மாதையன் குட்டையை சேர்ந்தவர் பிரகாஷ்(35). இவர் மேட்டூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் எதிரே தாபா ஹோட்டல் நடத்தி வருகிறார்.இந்த ஹோட்டலில் ஏராளமானோர் உணவருந்தி செல்கின்றனர். இதனால் இங்கு எப்போதும் கூட்டம் அதிகமாக காணப்படும்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழை அதிகாலை 5 மணியளவில் தாபா ஹோட்டல் திடீரென தீப்பற்றி எரிந்தது.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் மேட்டூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மேட்டூர் தீயணைப்பு படை அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் வந்த தீயணைப்புப் படையினர் தண்ணீரை பீச்சி அடித்து கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தீயை சுமார் ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர்.

தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்கள்.

ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

இந்த தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பிரிட்ஜ், மின்விசிறி, டிவி,டேபிள் சேர்கள், சமையல் செய்யும் உபகரணங்கள் என ஏராளமான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. ஹோட்டலில் இருந்து ஆறு சமையல் எரிவாயு உருளைகள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டதால் பெரும் அசாம்விதம் தவிர்க்கப்பட்டது.

தீ விபத்துக்கு மின் கசிவு காரணமாக ? அல்லது தொழில் போட்டி காரணமாக யாரேனும் தீ வைத்தனரா? என்பது குறித்து மேட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தீ விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் மின் கசிவு காரணமாகவா அல்லது மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தனரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனைவியுடனான சண்டைக்குப் பிறகு யமுனையில் குதித்த இளைஞா் உயிருடன் மீட்பு

கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் 2 வாரத்தில் மேலும் 1 ஏக்கா் நிலத்தை மீட்க நடவடிக்கை

தீ தடுப்பு விதிகளைப் பின்பற்றுவோம்!

பள்ளிக் கட்டட பரப்பளவுக்கு ஏற்ப வகுப்புப் பிரிவுகளின் எண்ணிக்கை - சிபிஎஸ்இ விதிகளில் திருத்தம்

சாதி மறுப்பு திருமணங்களில் காவல் துறை கட்டப்பஞ்சாயத்து -தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT