ராமேசுவரம் தீவுப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் வெள்ளிக்கிழமை(நவ.22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  (கோப்புப்படம்)
தற்போதைய செய்திகள்

ராமேசுவரம் தீவுப்பகுதி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் தீவுப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் வெள்ளிக்கிழமை(நவ.22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் தீவுப் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் வெள்ளிக்கிழமை(நவ.22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாள்களாக பெய்த மழைநீர் பள்ளிகளில் தேங்கியுள்ளதால் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில், ராமநாதபுரம், ராமேசுவரம், மண்டபம், பாம்பன், கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை காலை முதல் மழை பெய்யத் தொடங்கியது. இதனால், கடைகள், குடியிருப்புப் பகுதிகளை வெள்ள நீா் சூழ்ந்தது.

ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் பலத்த மழை பெய்தது. குடியிருப்புப் பகுதிகளை வெள்ள நீா் சூழ்ந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ராமேசுவரத்தில் பல்வேறு இடங்களில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை ஈடுபட்டனா். வெள்ள நீா் சூழ்ந்த பகுதிகளில் டேங்கா் லாரிகள் மூலம் தண்ணீரை உறிஞ்சி வெளியேற்றி வருகின்றனா். ராமேசுவரத்தில் வியாழக்கிழமை காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 20 மி.மீ. மழை பெய்துள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை

இந்த நிலையில், ராமேசுவரம் தீவுப் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் வெள்ளிக்கிழமை(நவ.22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாள்களாக பெய்த மழைநீர் பள்ளிகளில் தேங்கியுள்ளதால் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொடியேற்றத்துடன் தொடங்கியது வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு!

கூட்டாட்சியை வலுப்படுத்துவோம்: மாநில முதல்வர்கள், கட்சித் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

பாம் திரைப்பட டிரைலர்!

18 மைல்ஸ் படத்தின் முன்னோட்டம்!

SCROLL FOR NEXT