பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 14 முதல் 18 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் கொண்டாடப்படும் நிலையில், ஒருநாள் முன்னதாக போகி பண்டிகைக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் திருநாளான பொங்கல் ஜன. 15ஆம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து 16 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) திருவள்ளுவர் தினம்மும், 17ஆம் தேதி (சனிக்கிழமை) உழவர் தினமும் கொண்டாடப்பட இருக்கிறது.
இந்நிலையில், போகி பண்டிகைக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் சொந்த ஊர்களுக்கு வசதியாக செல்லும் வகையில், ஜனவரி 14ஆம் தேதி (போகி) புதன்கிழமையையும் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.