பள்ளிகளுக்கு விடுமுறை 
தற்போதைய செய்திகள்

காரைக்காலில் தொடர் மழை: பள்ளிகளுக்கு விடுமுறை!

காரைக்காலில் பரவலாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக செவ்வாய்க்கிழமை(ஜன.13)பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

காரைக்கால்: காரைக்காலில் பரவலாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக செவ்வாய்க்கிழமை(ஜன.13)பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், செவ்வாய்க்கிழமை (ஜன. 13) முதல் ஜன. 18 வரை தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, புறநகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், காரைக்காலில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதையடுத்து தொடர் மழை காரணமாக, காரைக்காலில் செவ்வாய்க்கிழமை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.

Continuous rain in Karaikal: Schools closed!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கல்: சிறப்புப் பேருந்துகளில் 4.88 லட்சம் பேர் பயணம்

தில்லியில் இருந்து புறப்பட்டார் விஜய்!

விளையாட்டுக் கல்வியும் வேலைவாய்ப்புகளும்!

பொங்கட்டும் மகிழ்ச்சி; வெல்லட்டும் தமிழ்நாடு! முதல்வர் ஸ்டாலின்

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது!

SCROLL FOR NEXT