நடிகர் வெற்றி வசந்த் - வைஷ்ணவி  
தற்போதைய செய்திகள்

சிறகடிக்க ஆசை நடிகரின் திருமணத் தேதி அறிவிப்பு!

சிறகடிக்க ஆசை நடிகர் வெற்றி வசந்த் - வைஷ்ணவி திருமணம் தொடர்பாக...

DIN

சிறகடிக்க ஆசை நடிகர் வெற்றி வசந்த் - வைஷ்ணவியின் திருமணத் தேதி குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகர் வெற்றி வசந்த். இவர் இத்தொடரில் முத்து பாத்திரத்தில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்

இவர் முன்னதாக யூடியூபில் பல தொடர்களில் நடித்துள்ளார். தற்போது தொலைக்காட்சித் தொடரில் நடித்து வருகிறார். இவருக்கு இளைஞர்கள், இல்லத்தரசிகள் என பலதரப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

அதேபோல், ராஜா ராணி 2ஆம் பாகத்தில் பார்வதி பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர் நடிகை வைஷ்ணவி. இவர், தற்போது பொன்னி தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.

நடிகர் வெற்றி வசந்த் தான் காதலித்து வந்த நடிகை வைஷ்ணவியை மணக்கவுள்ளதாக முன்னதாக தெரிவித்திருந்தார்.

அதன்படி, சென்னையில் கடந்த அக். 13 அன்று வெற்றி வசந்த் - வைஷ்ணவிக்கு திருமண நிச்சயதார்த்தத்தம் நடைபெற்றது. இந்நிகழ்வில் சின்னத்திரை பிரபலங்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என முக்கியமானவர்கள் பங்கேற்றனர். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் அனைத்தும் வைரலானது.

இந்த நிலையில், வெற்றி வசந்த் - வைஷ்ணவிக்கு வரும் 28 ஆம் தேதி காலை 9 மணிக்கு திருமணம் நடைபெறவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொந்த வீடு இல்லாதது குற்றமா? 3 பிஎச்கே சொல்ல வருவது என்ன?

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

SCROLL FOR NEXT