பரத் பொம்மை 
தற்போதைய செய்திகள்

கர்நாடக இடைத்தேர்தல்: பசவராஜ் பொம்மை மகன் தோல்வி!

கர்நாடக இடைத்தேர்தலில் பரத் பொம்மை தோல்வி

DIN

கர்நாடக இடைத்தேர்தலில் ஷிக்காவ்ன் தொகுதியில் போட்டியிட்ட பசவராஜ் பொம்மை மகன் பரத் பொம்மை, அவரை எதிர்த்து போட்டியிட்ட யாசீர் அகமதுகானிடம் 13,448 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.

கர்நாடகத்தில் 3 எம்.எல்.ஏ.க்கள் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ராமநகரம் மாவட்டத்தின் சென்னப்பட்டணா, ஹாவேரி மாவட்டத்தின் ஷிக்காவ்ன், பெல்லாரி மாவட்டத்தின் சண்டூர் தொகுதிகளில் நவ.13ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.

இந்த நிலையில், சென்னப்பட்டணா, ஷிக்காவ்ன், சண்டூர் உள்ளிட்ட தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றிப் பெற்றுள்ளது.

ஷிக்காவ்ன் தொகுதியை பாஜக கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பசவராஜ் பொம்மை மகன் பரத் பொம்மை தோல்வியடைந்துள்ளார்.

கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான பசவராஜ் பொம்மை, ஷிக்காவ்ன் சட்டப்பேரவைத் தொகுதியின் பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்திருந்த நிலையில் இடைத்தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங்!

பேரவைத் தேர்தல் : அதிமுகவிடம் 35 தொகுதிகளைக் கேட்கும் பாஜக?

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சுபம் பண்டிர் சதம்: முதல் நாளில் ஜம்மு காஷ்மீர் 284 ரன்கள் குவிப்பு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ. 90.95 ஆக நிறைவு!

கிரையோதெரபி: புற்றுநோய் சிகிச்சையின் மைல்கல்! கட்டிகளை உறைய வைத்து அழிக்கும்!

SCROLL FOR NEXT