அகிலேஷ் யாதவ்  
தற்போதைய செய்திகள்

ஒன்றிணைந்தால் நாம் வெற்றி பெறலாம்: அகிலேஷ் யாதவ்

உத்தரப் பிரதேச பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து...

DIN

ஒன்றிணைந்தால் நாம் வெற்றி பெறலாம் என்று உத்தரப் பிரதேச இடைத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”தேர்தலை ஊழலுக்கு இணையாக ஆக்கியவர்களின் தந்திரங்களை புகைப்படங்களாக எடுத்து, உலகிற்கு காட்டும் நேரம் வந்துவிட்டது. உண்மையான போராட்டம் தொடங்கிவிட்டது. ஒன்றிணைந்தால் நாம் வெற்றி பெறலாம்” என்று தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் 9 பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் 7 தொகுதிகளில் பாஜக வெற்றிபெறும் நிலையில் உள்ளது. சமாஜவாதி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் - சமாஜவாதி கூட்டணி அமைந்தால் பாஜகவை வீழ்த்தலாம் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் சூசகமாக தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்தியநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

SCROLL FOR NEXT