தற்போதைய செய்திகள்

இந்த வாரம் ஓடிடியில் 6 தமிழ் படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து...

DIN

இந்த வாரம் ஓடிடியில் 6 தமிழ் படங்கள் வெளியாகின்றன. எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

துல்கர் சல்மானின் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

ஜெயம் ரவி - எம். ராஜேஷ் கூட்டணியில் உருவான பிரதர் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நாளை(நவ. 29) வெளியாகிறது.

கவின் நடிப்பில் வெளியான பிளடி பெக்கர் பெக்கர் திரைப்படம் சிம்பிளி செளத் ஓடிடியில் நாளை(நவ. 29) காணலாம்.

அந்தாதுன் படத்தை தமிழில் ரீமேக் செய்யப்பட்டு இயக்குநர் தியாகராஜன் - பிரசாந்த் கூட்டணியில் உருவான அந்தகன் திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

ஸ்ரீகாந்த், சோனியா அகர்வால், ஐஷ்வர்யா தத்தா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ஷ் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியில் நேரடியாக நாளை(நவ. 29) வெளியாகிறது.

ஜெயபால் இயக்கத்தில் விக்ராந்த் - ரித்விகா நடிப்பில் உருவாகியுள்ள தீபாவளி போனஸ் திரைப்படத்தை ஆஹா தமிழ் ஓடிடியில் காணலாம்.

கிஷோர், காளி வெங்கட், கனி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இணையத் தொடர் பாராசூட். இத்தொடர் நாளை(நவ. 29) டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் காணலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT