மதுரை கோரிப்பாளையத்தில் மேம்பாலம் கட்டுவதற்காக அமைக்கப்பட்டிருந்த இரும்பு சாரம் பாரம் தாங்காமல் சரிந்து விழுந்தது. 
தற்போதைய செய்திகள்

மதுரையில் மேம்பால இரும்பு சாரம் சரிந்து விபத்து: 4 பேர் காயம்

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்காக அமைக்கப்பட்டிருந்த இரும்பு சாரம் சரிந்து விழுந்ததில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

DIN

மதுரை: மதுரை கோரிப்பாளையத்தில் மேம்பாலம் கட்டுவதற்காக அமைக்கப்பட்டிருந்த இரும்பு சாரம் புதன்கிழமை இரவு சரிந்து விழுந்ததில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

மதுரை நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கையாக, கோரிப்பாளையத்தில் தல்லாகுளம் சந்திப்பு முதல் செல்லூர் வரை ரூ.190 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. புதன்கிழமை இரவு அந்த பகுதியில் இரும்பு சாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென இரும்பு சாரம் பாரம் தாங்கமால் சரிந்து விழுந்தது.

இதில், அங்கு பணியில் ஈடுபட்டிருந்தவர்களில் திருச்சி துறையூரை சேர்ந்த பழனி, அய்யங்காளை, காளி மற்றும் ஜெய்சன் ஆகிய 4 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

படுகாயமடைந்த 4 பேரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மழையின் காரணமாக கான்கீரிட் கட்டுமானம் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மும்பையில் சி.என்.ஜி. குழாய் சேதத்தால் கேஸ் விநியோகம் பாதிப்பு!

இரவில் சென்னை, 12 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் 2026 இல் கூட்டணி ஆட்சி அமையும்: பிரேமலதா விஜயகாந்த்

காதல் சடுகுடு... அனுபமா பரமேஸ்வரன்!

மாஸ்கோவில் ரஷிய வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் நாளை சந்திப்பு!

SCROLL FOR NEXT