ஹரியாணாவில் ராட்டினம் சரிந்து விபத்து: காவலர் பலி, 13 பேர் காயம்
ஹரியாணாவில் நடைபெற்ற கண்காட்சியில் ராட்சத ராட்டினம் சரிந்து விபத்துக்குள்ளானதில் காவலர் ஒருவர் பலியானார்.
ஹரியாணாவில் நடைபெற்ற கண்காட்சியில் ராட்சத ராட்டினம் சரிந்து விபத்துக்குள்ளானதில் காவலர் ஒருவர் பலியானார்.
ஹரியாணா மாநிலம், சூரஜ்குன்ட் கண்காட்சியில் சனிக்கிழமை ராட்சத ராட்டினம் திடீரென சரிந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் பணியில் இருந்த காவல் அதிகாரி ஒருவர் பலியானார். மேலும் 13 பேர் காயமடைந்தனர்.
விபத்து தொடர்பான விடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement
தகவல் கிடைத்ததும் மாவட்ட துணை ஆணையர் ஆயுஷ் சின்ஹா, சுற்றுலா மேலாண்மை இயக்குனர் பார்த் குப்தா ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர்.
மாலை 6 மணியளவில் சுமார் 15 பேருடன் ராட்டினம் திடீரென சரிந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்று அவர்கள் மேலும் கூறினர். மீட்பு நடவடிக்கையின் போது, கடை நடத்துனர் ராகவ்விற்கும் காயம் ஏற்பட்டது.
முன்னதாக, மாலை 5 மணியளவில், கண்காட்சி திடலின் 2வது வாயில் திடீரென இடிந்து விழுந்ததில் குழந்தை உட்பட இரண்டு பேர் காயமடைந்தனர்.
An on duty police officer died while nearly a dozen people were injured when a swing fell down at Surajkund fair here on Saturday, just an hour after two people, including a child, got hurt in a gate collapse incident, officials said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.