FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தலையங்கம்

யார் கவலைப்படுகிறார்கள்...

இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பிற நாடுகளிலும் இந்த ஆண்டு சுரங்க விபத்துகள் நடந்து, உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது, நடந்திருக்கும் விபத்துக்குப் பதிலாகவோ, ஆறுதலாகவோ இருந்து விடாது.

Updated On : 25 ஜூலை 2026, 7:16 am IST
தெலங்கானா சுரங்க விபத்து நடந்த பகுதி.
பகிர்:

அவ்வப்போது சுரங்க விபத்து நடப்பதும், சில உயிரிழப்புகள் நிகழ்வதும் நமக்கு வழக்கமாகி விட்டது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பிற நாடுகளிலும் இந்த ஆண்டு சுரங்க விபத்துகள் நடந்து, உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது, நடந்திருக்கும் விபத்துக்குப் பதிலாகவோ, ஆறுதலாகவோ இருந்து விடாது.

இந்தியாவிலேயே மேகாலய மாநிலத்தில் உள்ள கிழக்கு ஜெய்ன்தியா ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள சுரங்கத்தில் சட்ட விரோதமாக வெடி மருந்து வைத்துத் தகர்க்க முற்பட்டபோது ஏற்பட்ட சுரங்க விபத்தில், பிப்ரவரி மாதம் 18 பேர் பலியானார்கள், அண்மையில் ஜூலை மாதம் கேரள மாநிலம் வயநாட்டில் சுரங்கப் பாதை பணியின்போது ஏற்பட்ட நிலச்சரிவில் 8 பேர் உயிரிழந்தனர்.

இப்போது அவற்றைத் தொடர்ந்து , சிக்கிம் மாநிலம் நாம்ச்சி மாவட்டத்தில் தேசிய நீர்மின் கழகத்தின் தீஸ்தா நிலை}6 மின்திட்டக் கட்டுமான சுரங்கப் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 25 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்; நாம்ச்சி மாவட்டம் சமர்டுங் பகுதியில் நடைபெற்று வந்த சுரங்கப் பாதை கட்டுமானப் பணியின்போது, திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது.

Advertisement

Advertisement

சுரங்கத்தின் வெவ்வேறு பகுதிகளில் 27 பேர் பணியில் ஈடுபட்டிருந்தபோது விபத்து நேர்ந்திருக்கிறது. அந்தப் பணியாளர்களில் பெரும்பாலானோர் மேற்கு வங்கம், உத்தரகண்ட், அஸ்ஸôம் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களில் இருவர் மட்டும் எப்படியோ வெளியேறி உயிர் பிழைத்திருக்கிறார்கள்.

சுரங்கப் பணியின்போது, மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் மீத்தேன் வாயு வெளியேறுவது என்பது புதிதொன்றுமல்ல. அதிலும் குறிப்பாக, தீஸ்தாவின் புவியியல் பகுதியில் அது எதிர்பாராததும் அல்ல. தீஸ்தா நீர்ப்பிடிப்புப் பகுதி ஏற்கெனவே நிலநடுக்கப் பகுதியாக இருப்பதால், நீண்டகாலம் உருமாற்றம் இல்லாத பாறைகள் அடங்கிய பகுதி. அந்தப் பாறைகளுக்கு நடுவில் மீத்தேன் உள்ளிட்ட வாயுக்கள் அடைபட்டுக் கிடப்பது புதிதல்ல. சுரங்கப் பணியின்போது, உளிபட்டுக் கீறல் விழும்போது, அடைந்து கிடக்கும் வாயு வெடித்து வெளியேறுகிறது.

சிக்கிம், மேற்கு வங்கம் வழியாக தீஸ்தா நதி பாய்ந்து வங்கதேசத்தை அடைகிறது. அதன் 400 கி.மீ. பாதையில் பல்வேறு நீர்மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. அதற்கான சுற்றுச்சூழல் அனுமதி பல்வேறு சட்ட ஆய்வுக்குப் பிறகுதான் வழங்கப்படுகின்றன. ஆனாலும்கூட, அவை இமயமலையை ஒட்டிய அல்லது மீதான பகுதிகளில் அமைக்கப்படுகிறது என்பதை மறந்துவிடக் கூடாது. அக்டோபர் 2023-இல் இமயமலையில் பனி உருகி ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் தெற்கு லோனாக் ஏரி உடைந்து நூற்றுக்கணக்கான மக்கள் அடித்துச் செல்லப்பட்டனர்.

தீஸ்தா-6 நீர்மின் நிலையம் தனியார் துறையினரால் அணையுடன் கட்டமைக்கப்பட்டது. அதிகரித்த கட்டுமானச் செலவால், திவாலாகிவிட்ட அந்த நிறுவனம் அந்தத் திட்டத்தைக் கைவிட்டது. அதன் காரணமாக அரசு நிறுவனமாக அதை மாற்றி, அந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது. அந்த நிலையில்தான் இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது. இந்த விபத்தை முற்றிலும் எதிர்பாராத விபத்து என்றோ, தவிர்த்திருக்க முடியாத ஒன்று என்றோ சொல்லிவிட முடியாது.

சுரங்கப் பணி என்பது பொறியியல் செயல்பாடுகளில் மிகவும் கடினமானதும், சவாலானதுமான ஒன்று. தொழிலாளர்கள் பூமிக்கு அடியில் மிகக் குறுகிய இடத்தில், வெளியேற போதிய வசதிகள் இல்லாத நிலையில்தான் பணியாற்றுகிறார்கள்.

மீத்தேன் வாயு வெளியேறிக் காற்றில் கலக்கும்போது, சிறிய தீப்பொறி எழுந்தாலும் (உரசுவதாலோ, பயன்படுத்தப்படும் கருவிகளாலோ, மின்சார உபகரணங்களாலோ) வெடித்துச் சிதறிவிடும்.

அப்போது, ஏற்படும் எதிர்பாராத அதிர்ச்சி, கிளம்பிவரும் புகை, பிராண வாயுவை அகற்றி உயரும் கார்பன் மோனாக்ûஸடு உள்ளிட்டவை மூச்சுத் திணறலை ஏற்படுத்திப் பணியாளர்களைஉயிரிழக்கச் செய்துவிடும். பூமிக்கடியில் ஏற்படும் வெடிவிபத்துகள் அத்துடன் நின்றுவிடுவதில்லை. பாறைகள் இடிந்து சரிவதும், அடைந்து கிடக்கும் பல்வேறு வாயுக்களின் வெளியேற்றமும் தொழிலாளர்கள் தப்பித்து வெளியேறுவதைக் கடினமாக்கி விடுகின்றன.

21-ஆவது நூற்றாண்டில் பல்லாயிரம் கி.மீ. தொலைவில் உள்ள இலக்கைத் தாக்குகின்றன ஆளில்லாத ஏவுகணைகள். ரோபோக்கள் மூலம் அறுவை சிகிச்சை நடத்தப்படுகிறது; ஓட்டுநர் இல்லாமல் வாகனங்கள் நகரத்தின் சாலைகளில் பயணிக்கும் அளவுக்குத் தொழில்நுட்பமும் அறிவியலும் வளர்ந்திருக்கின்றன. மீத்தேன் வாயு இருப்பதைக் கண்டறிந்து, அதை அகற்றிய பிறகு சுரங்கப் பணிகள் மேற்கொள்ள இன்னும் ஏன் தொழில் நுட்பம் தயாராகவில்லை? என்பது புதிராக இருக்கிறது.

வளர்ச்சிப் பணிகளை அப்படியே கைவிடுவது என்பது புத்திசாலித்தனமல்லதான். அதே நேரத்தில் அதில் ஈடுபடும் தொழிலாளர்களின் உயிருக்குப் பாதுகாப்பு அளிப்பதை உறுதிப்படுத்துவதும் அரசின் கடமையல்லவா?

நவீன இந்தியாவைக் கட்டமைக்கத் தங்கள் உயிரைத் தியாகம் செய்யும் அந்த அப்பாவி ஏழைத் தொழிலாளர்கள் அடையாளம் தெரியாமல், நினைவுகூரப்படாமல் புதைகிறார்கள். அவர்கள் ஆத்மா சாந்தியடைவதாக...!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments