எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி 
தற்போதைய செய்திகள்

திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு பயமில்லை: இபிஎஸ் விமர்சனம்

தமிழகத்தில் திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு பயமில்லை திருப்பூர் சேமலைக் கவுண்டம்பாளையம் சம்பவத்தை மேற்கொள் காட்டி எடப்பாடி கே.பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

DIN

சென்னை: தமிழகத்தில் திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு பயமில்லை திருப்பூர் சேமலைக் கவுண்டம்பாளையம் சம்பவத்தை மேற்கொள் காட்டி அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர்- சேமலைக் கவுண்டம்பாளையத்தில் விவசாய தம்பதி மற்றும் மகன் என ஒரே குடும்பத்தில் மூவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு துளியும் பயமில்லை. இந்த ஆட்சியில் நடக்கும் தொடர் குற்றங்கள், "இவற்றை தடுக்க இங்கு ஒரு ஆட்சி இருக்கிறதா? இல்லையா?" என்ற அச்சமிகு கேள்வியை மக்களிடத்தில் எழுப்புகின்றன.

தமிழ்நாட்டை குற்றவாளிகளின் சொர்க்கபூமியாக மாற்றியிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த கொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், சட்டம் ஒழுங்கைக் காக்க திமுக முதல்வர் ஸ்டாலின் இனியாவது செயல்பட வேண்டும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போவோமா ஊர்கோலம்... அஹானா கிருஷ்ணா!

மரகதப் பறவை... பிரணிதா சுபாஷ்!

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

TVK Vijay full speech - முதல்வருக்கு சில கேள்விகள்! | TVK | Vijay

இதையெல்லாம் நம்பாதீங்க... ராஜாசாப் படக்குழு அறிக்கை!

SCROLL FOR NEXT