ஜம்மு காஷ்மீர் இறுதிக்கட்ட தேர்தல். படம்: ஏஎன்ஐ
தற்போதைய செய்திகள்

ஜம்மு - காஷ்மீர் இறுதிக்கட்ட தேர்தல்: 9 மணி நிலவரம்!

ஜம்மு-காஷ்மீரில் இறுதிக்கட்டத் தோ்தலுக்கான 9 மணி நிலவரம்..

DIN

ஜம்மு - காஷ்மீர் இறுதிக்கட்டத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 11.60% வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் பேரவைக்கான மூன்றாம் மற்றும் இறுதிக் கட்டத் தோ்தல் செவ்வாய்க்கிழமை (அக்.1) நடைபெற்று வருகிறது. இன்று மாலை 6 மணிவரை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

40 தொகுதிகளில் நடைபெறவுள்ள இந்த தோ்தலில் முன்னாள் துணை முதல்வா்கள் தாரா சந்த் மற்றும் முஸாஃபா் பெக் உள்பட 415 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். தோ்தலை நடத்தும் பணியில் 20,000 தோ்தல் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டத் தோ்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்டத் தோ்தலில் (24 தொகுதிகள்) 61.38 சதவீதமும், கடந்த 25-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்டத் தோ்தலில் (26 தொகுதிகள்) 57.31 சதவீத வாக்குகளும் பதிவாகின.

இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீர் இறுதிக்கட்டத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி, பதிவான வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி பந்திபோராவில் 11.64 சதவீத வாக்குகளும், பாரமுல் 8.89%, ஜம்மு 11.46%, கதுவா 13.09%, குப்வாரா 11.27%, உத்தம்பூா் 14.23%, சம்பா 13.31% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரெப்கோ வங்கியில் மார்க்கெட்டிங் அசோசியேட் பணிகள்

தொழிற்பயிற்சி மையத்தில் அக்கவுண்ட் ஆபீசர் பணி

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

SCROLL FOR NEXT