FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு தென் மாவட்டங்கள் உள்பட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

2 அக்டோபர் 2024, 1:38 pm IST
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு தென் மாவட்டங்கள் உள்பட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பரவலாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு(இன்று மாலை 4 மணி வரை) திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கோவை, விருதுநகர், சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments