ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் உலகப் பணக்காரர் வரிசையில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
மெட்டா நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருப்பதால், உலகப் பணக்காரர்கள் வரிசையில் 2-வது இடத்தில் இருந்த அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்ஸை பின்னுக்குத் தள்ளி மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
புளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி மார்க் ஜூக்கர்பர்க்கின் பங்குகள் தொடர்ந்து உயர்ந்துகொண்டு வருகின்றன.
முதலில் சரிவது போல இருந்த மார்க்கின் பங்குகள் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 206.2 பில்லியன் டாலர்கள் அளவுக்கு உயர்ந்துள்ளன. அவர் தற்போது 2-வது இடத்தில் இருந்த அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ்ஸைவிட 1.1 பில்லியன் டாலர்கள் அதிகமாக உள்ளார். இருப்பினும் முதலிடத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் உள்ளார். அவர் மார்க்கைவிட 50 பில்லியன் டாலர்கள் அதிகமாக வைத்துள்ளார்.
அனைவரும் எதிர்பார்த்ததைவிட இரண்டாம் காலாண்டில் மெட்டாவின் பங்குகள் அதிகளவில் உயர்ந்தன. குறிப்பிடத்தக்க அம்சமாக 23 சதவீதம் உயர்ந்துள்ளன. மார்க்கின் பவர் ஏஐ சாட்பாக்ஸ் அவருக்கு அதிகளவிலான உயர்வுக்கு வழிவகுத்துள்ளன. மெட்டாவின் ஒரு பங்குகள் வியாழக்கிழமை 582.77 டாலர்களில் நிறைவடைந்தன.
தொழில் நுட்பவுலகில் செய்யறிவு பந்தயத்தில் இருக்கும் நிறுவனங்களில் மெட்டா நிறுவனமும் தனது தரவு மையத்தை உருவாக்கவும், கணினிகளுக்காகவும் அதிகளவில் செலவிட்டுள்ளது. மெட்டா நிறுவனம் கடந்த மாதம் அறிமுகப்படுத்திய ஓரியன் ஆகுமெண்ட் ரியாலிட்டி கண்ணாடிகள் போன்ற எதிர்காலத் திட்டங்களுடன் விரைவாக முன்னேறி வருகிறது.
மார்க் ஜூக்கர்பெர்க் கலிபோர்னியாவைச் சேர்ந்த நிறுவனமான மென்லோ பார்க்கில் 13 சதவீத பங்குகளை வாங்கி வைத்துள்ளார். இந்தப் பங்குகள் இந்தாண்டு மட்டும் 78 பில்லியன் டாலர்களை மார்க்கிற்கு சம்பாரித்து கொடுத்துள்ளன. இந்த வளர்ச்சியானது புளூம்பெர்க் நிறுவனத்தில் ஆராயப்பட்ட 500 உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அதிகளவிலான வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
உலகப் பணக்காரர்கள் (முதல் 10 இடங்களில்..)
எலான் மஸ்க் -256 பில்லியன் டாலர்
மார்க் ஜூக்கர்பெர்க் -206 பில்லியன் டாலர்
ஜெஃப் பெசோஸ் -205 பில்லியன் டாலர்
பெர்னார்ட் அர்னால்ட் -193 பில்லியன் டாலர்
லாரி எலிசன் -179 பில்லியன் டாலர்
பில் கேட்ஸ் -161 பில்லியன் டாலர்
லாரி பேஜ் -150 பில்லியன் டாலர்
ஸ்டீவ் பால்மர் -145 பில்லியன் டாலர்
வாரன் பஃபெட் -143 பில்லியன் டாலர்
செர்ஜி பிரின் -141 பில்லியன் டாலர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.