மண்ணச்சநல்லூர்: பிரசித்தி பெற்ற குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வேங்கடாஜலபதி பெருமாள் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா முழக்கத்துடன் தரிசனம் செய்தனர்.
திருச்சி மாவட்டம் குணசீலத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ பிரசன்ன வேங்கடாசலபதி பெருமாள் திருக்கோயில் பதியான வைகுண்ட வாஸுதேவன் குணசீல மஹரிஷியின் தவத்திற்காக ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசனாக காட்சியளித்த அற்புதத் தலம் குணசீலம்.
இங்கு எழுந்தருளியிருக்கும் பெருமான் சங்கு சக்கரதாரியாய் திருமார்பில் இலக்குமி துலங்க, கையினில் செங்கோல் ஏந்தி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாா். தன்னை அண்டி வரும் பக்தா்களுக்கு வேண்டுவன எல்லாம் நல்கி சித்தப் பிரமை நீக்கி மன நலம் காத்து அருள்பொழியும் பிரசன்ன வேங்கடேசப் பெருமான், முக்கியமாக மன நலம் பாதிக்கப்பட்டோர் 48 நாட்கள் விரதம் இருந்து முறைப்படி வணங்கினால் அந்த
வினைகள் யாவையையும் பரம கருணையினாலே போக்கி அருள் புரிகின்றார்.
மேலும் திருப்பதிக்கு சென்று தங்களது பிராத்தனைகளை செலுத்த இயலாதவர்களும் அந்த பிரார்த்தனையை பிரசன்ன வேங்கடேசப் பெருமானிடத்தே செலுத்தி சுகம் பெறுகின்றனர்.
இதையும் படிக்க | மராத்தி, பாலி உள்பட 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து!
தென் திருப்பதி என்று அழைக்கப்படும் இந்த தலம் மன நலம் காக்க மண்ணுலகில் அவதரித்த பிரசன்ன வேங்கடேசப்பெருமாள் குணசீல மஹரிஷிக்கு காட்சியளித்த புனித நாளான புரட்டாசி திருவோண நட்சத்திரத்தை முக்கியமாகக் கொண்டு பிரம்மோற்சவ விழாவானது வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. திரளான பக்கர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
அக்.3 ஆம் தேதி பகவத் பிரார்த்தனை, புண்யா க வாசனம், மிருத்ஸங்க்ரஹணம், அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி பூஜைகள் நடைபெற்றது.
அக். 4 ஆம் தேதி வெள்ளிக்கிழமை புண் யாஹ வாசனம், பேரீதாடனம், திக்பந்தனம், பூஜைகளுக்கு பிறகு கொடிமரத்தில் த்வஜா ரோஹணம் என்று அழைக்கப்படும் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாரதனை நடைபெற்றது.
அக்.7 ஆம் தேதி கருட சேவையும், அக். 10 ஆம் தேதி திருக்கல்யாண உற்சவமும், அக் 11 ஆம் தேதி குதிரை வாகன உற்சவமும் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் அக்.12 ஆம் தேதி நடைபெற உள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை நிர்வாக டிரஸ்டி கே.ஆர்.பிச்சுமணி அய்யங்கார் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.