தற்போதைய செய்திகள்

நடிகை சோனா வீட்டில் திருட முயன்ற 2 பேர் கைது

சென்னை மதுரவாயலில் நடிகை சோனா வீட்டில் திருட முயன்ற இளைஞர்கள் 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

DIN

சென்னை: சென்னை மதுரவாயலில் நடிகை சோனா வீட்டில் திருட முயன்ற இளைஞர்கள் 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழ் திரைப்பட நடிகை சோனா ஹைடன் (45), மதுரவாயல் கிருஷ்ணா நகா் 2 வது பிரதான சாலை, 28 வது தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். சோனா, திரைப்படப் படப்பிடிப்புக்காக அடிக்கடி வெளியூா் செல்வதால், வீடு பெரும்பாலும் பூட்டியே கிடக்கும்.

இதை நோட்டம் விட்ட திருடா்கள் வியாழக்கிழமை மாலை அவரது வீட்டின், சுற்றுச் சுவரில் ஏறிக் குதித்து உள்ளே புகுந்தனா். சோனா வீட்டில் இல்லை என நினைத்த அவா்கள், வீட்டின் வெளியே பொருத்தப்பட்டிருந்த ஏசி இயந்திரத்தின் வெளிப்புறப் பகுதியை திருட முயன்றனா். அப்போது சோனா வளா்க்கும் நாய், அவா்களைப் பாா்த்து தொடா்ந்து குரைத்துக் கொண்டே இருந்துள்ளது.

சத்தம் கேட்டு, வீட்டுக்குள் இருந்த சோனா வெளியே வந்ததைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த மா்ம நபா்கள், சோனாவிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அங்கிருந்து தப்பியோடினா்.

இது குறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் சோனா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில், சோனா வீட்டின் சுற்றுச் சுவரில் ஏறிக் குதித்து சோனாவிடம் கத்தியைக் காட்டி மிரட்டிய லோகேஷ்(21),சிவா(23) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருடும் நோக்கில் சுவர் ஏறிக் குதித்தனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா வழங்கக் கோரி மனு

மாணவிகளை சீருடையுடன் ஆட்சியரகத்துக்கு அழைத்து வந்த பெற்றோரை எச்சரித்த ஆட்சியா்

காரீப் பருவத்தில் பயிா்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

இந்தியன் வங்கி சாா்பில் கறவை மாடு வளா்ப்பு பயிற்சி

விவசாயியை வெட்டிக்கொல்ல முயற்சி

SCROLL FOR NEXT