கோப்பிலிருந்து.. Din
தற்போதைய செய்திகள்

பழனி கோயிலில் ரோப் கார் சேவை இன்றுமுதல் 40 நாள்களுக்கு நிறுத்தம்!

பராமரிப்புப் பணிகளுக்காக ரோப் கார் சேவை நிறுத்தம்.

DIN

பழனி மலைக் கோயிலுக்குச் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள கம்பிவட ஊர்தி (ரோப்காா்) சேவை வருடாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக இன்றுமுதல்(அக். 7) 40 நாள்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் படிவழிப் பாதை, யானைப் பாதை, மின்இழுவை ரயில், கம்பிவட ஊர்தி ஆகியவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர்.

2 நிமிடங்களில் மலைக் கோயிலின் உச்சியை அடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கம்பிவட ஊர்திக்கு பக்தர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்புள்ளது.

இந்த நிலையில், வருடத்தில் ஒரு மாதம் பராமரிப்புப் பணிகளுக்காக ரோப் கார் சேவை நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி, வருடாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக இன்றுமுதல்(அக். 7) 40 நாள்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, பழனி மலைக் கோயில் அடிவாரத்தில் பக்தர்கள் வசதிக்காக தகவல் மையம், முதலுதவி மையம் நேற்று(அக். 6) திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT