தமிழிசை சௌந்தரராஜன் 
தற்போதைய செய்திகள்

குளிரூட்டும் வசதியுடன் அமர்ந்த அதிகார வர்க்கம்... சாமானிய மக்களை காக்கத் தவறியது ஏன்?

விமானப்படை சாகச நிகழ்ச்சி தொடர்பாக தமிழிசை சௌந்தரராஜன்...

DIN

நிகழ்ச்சி முன்னேற்பாடு குளறுபடியால் தவித்த சாமானிய மக்களை தமிழக அரசு காக்கத் தவறியது ஏன் என்று முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை செளந்திரராஜன் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்ததாவது:

குளிரூட்டும் வசதியுடன் முன் வரிசையில் அமர்ந்த அதிகார வர்க்கம். நிகழ்ச்சி முன்னேற்பாடு குளறுபடியால் தவித்த சாமானிய மக்களை தமிழக அரசு காக்கத் தவறியது ஏன்?

நடிகர் விஜய் கட்சியின் மாநாட்டிற்கு 21 கேள்விகள்,விநாயர் சதுர்த்தி ஊர்வலம்,கோயம்பேட்டில் நடக்கவிருந்த பாஜகவின் மாநாடு அதேபோல் ஆண்டாண்டு நடக்கும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கு எத்தனை பேர் வருவார்கள், எங்கே கார் நிறுத்தம், எங்கே பேருந்து நிறுத்தம், எங்கே உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, எங்கே மருத்துவ மையங்கள், ஆம்புலன்ஸ் வசதிகள்,இருசக்கர ஆம்புலன்ஸ் வசதி, எத்தனை மருத்துவர்கள்,எத்தனை செவிலியர்கள்,எத்தனை உதவியாளர்கள் என்றெல்லாம் பல கேள்விகள் கேட்கும் தமிழக அரசு.

நம் இந்திய நாட்டின் விமானப்படை நடத்தும் நிகழ்ச்சிக்கு உரிய முன்னேற்பாடுகளை செய்யாதது ஏன்? கார் பந்தயத்துக்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை முந்தைய நாளே முன் நின்று கவனித்த இன்றைய துணை முதலமைச்சர் தேசத்தின் பெருமையை பரைசாற்றும் விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த மக்களை காக்க தவறிய காரணம் என்ன? மாநில உரிமை பேசும் திராவிட மாடல் அரசு மக்கள் உயிரை காக்க தவறியது ஏன்? என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT