ஜம்மு-காஷ்மீர் பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தற்போது நிலவரப்படி காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின் தற்போது பேரவைத் தோ்தல் நடைபெற்றுள்ள நிலையில், மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக (செப். 18, 25, அக்.1) தேர்தல் நடைபெற்றது.
20 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஜம்மு-காஷ்மீா் தோ்தலில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும், பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) ஆகியவை தனித்தும் போட்டியிட்டன.
இதையும் படிக்க: தபால் வாக்குகள்: வினேஷ் போகத் முன்னிலை
காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி 42 தொகுதிகளிலும், பாஜக 35 தொகுதிகளிலும், மக்கள் ஜனநாயக கட்சி 3 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 10 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம்:
ஜம்மு-காஷ்மீர்:
காங்கிரஸ் கூட்டணி - 42
பாஜக - 35
பிற கட்சிகள் - 13
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.