வாழப்பாடி: வாழப்பாடி அருகே பால் வேன் மோதி ரயில்வே ஊழியர் வியாழக்கிழமை பலியானார்.
சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அடுத்த அனுப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி (57). இவர் பெரியகிருஷ்ணாபுரம் ரயில்வேகேட்டில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் வியாழக்கிழமை காலை பணி முடிந்ததும், அவரது இருசக்கர வாகனத்தில் வாழப்பாடி வழியாக பேளூர் சாலையில் அனுப்பூர் கிராமத்திற்கு சென்றுள்ளார்.
வாழப்பாடி அருகே துக்கியாம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பேளூர் பகுதியில் இருந்து வாழப்பாடி நோக்கி வந்துகொண்டிருந்த பால் வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதையும் படிக்க | பெண் மருத்துவா் கொலைச் சம்பவம்: சஞ்சய் ராய்க்கு எதிராக 11 ஆதாரங்கள்
இதில், விபத்துக்குள்ளான பால் வேன் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ரயில்வே ஊழியர் துரைசாமி உடல் நசுங்கினார். அவரை மீட்ட அந்த பகுதி மக்கள் வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மேலும் பால் வேன் மோதியதில் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த விவசாயி ஒருவரும் காயமடைந்தார்.
இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.