கோவை வெள்ளலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீா் சோதனை 
தற்போதைய செய்திகள்

வெள்ளலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: ரூ.13 லட்சம் பறிமுதல்

கோவை வெள்ளலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

DIN

கோவை: கோவை வெள்ளலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். இதில் கணக்கில் வராத ரூ.13.35 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது.

கோவை சித்தாபுதூர் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி, பத்திரப்பதிவிற்காக சென்றபோது ரூ.35 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர். இதையடுத்து அவர் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அந்த தகவலின் அடிப்படையில், ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை கருப்பசாமியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கொடுத்து அனுப்பினர்.

இதையடுத்து அந்த பணத்தை சார் பதிவாளர் அலுவலக இளநிலை உதவியாளரிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மாறு வேடத்தில் நோட்டமிட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், இளநிலை உதவியாளர் பூபதி ராஜா மற்றும் சார் பதிவாளர் நான்சி நித்யா கரோலின் ஆகிய இருவரையும் பிடித்தனர்.

பின்னர், சார் பதிவாளர் நான்சி நித்யா கரோலின் நான்கு சக்கர வாகனத்தை சோதனை செய்தனர். இதில் கணக்கில் வராத ரூ.13 லட்சத்து 35 ஆயிரம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

மேலும் இது தொடா்பாக அங்குள்ள அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினா். இருவர் மீதும் லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர்.

லஞ்ச ஒழிப்புத்துறையினரின் இந்த திடீா் நடவடிக்கை, ஊழியா்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் வியூகம் வெற்றி பெறுமா..? - சவுக்கு சங்கர்

ஒற்றைப்புள்ளி மக்களாட்சி

பலத்த பாதுகாப்புடன் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்!

மதுரை மாநாடு ஒத்திவைப்பு: ஓ. பன்னீர்செல்வம்

சென்னையில் 27 விமான சேவைகள் பாதிப்பு!

SCROLL FOR NEXT