இந்த வாரம் திரையரங்குகளில் ரஜினிகாந்த்தின் வேட்டையன், ஜீவாவின் பிளாக் திரைப்படங்கள் வெளியாகின்றன. ஓடிடி தளங்களில் வாரந்தோறும் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகின்றன.
வாரந்தோறும் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களை வீட்டில் இருந்து பார்ப்பதற்கென்று தனி ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான வாழை படம், நாளை(அக். 11) டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, மராத்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
இதையும் படிக்க: என்கவுன்டர் - என்ன சொல்கிறார் வேட்டையன்? - திரை விமர்சனம்
நடிகை வரலட்சுமி சரத்குமார் பிரதான பாத்திரத்தில் நடித்து வெளியான சபரி திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நாளை (அக். 11) வெளியாகவுள்ளது.
நடிகர் விமல் நடிப்பில் உருவான போகுமிடம் வெகு தூரமில்லை திரைப்படத்தை தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணலாம்.
விதார்த் நடித்து வெளியான லாந்தர் திரைப்படத்தை, ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நாளை(அக். 11) பார்க்கலாம்.
யாஷிகா ஆனந்தின் நடிப்பில் உருவான படிக்காத பக்கங்கள் படம் சிம்பிளி செளவுத் ஓடிடி தளத்தில் நாளை(அக். 11) காணலாம்.
ஜிவி பிரகாஷ் குமார் நடித்து வெளியான ரிபெல் படம், சிம்ப்ளி செளத் ஓடிடி தளத்தில் நாளை (அக். 11) வெளியாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.