போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள். Din
தற்போதைய செய்திகள்

ஆம்பூர்: ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கடையடைப்பு!

ஆம்பூர் கடையடைப்புப் போராட்டம் தொடர்பாக...

DIN

ஆம்பூர்: ஆம்பூரில் காணார் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதியில் சான்றோர் குப்பம் கிராமம் உள்ளது. இப்பகுதியில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வண்ணான்துறை என்ற பகுதி உள்ளது.

வண்ணான்துறை பகுதியில் இருந்து ஆம்பூர் பாலாற்றை இணைக்கும் லஷ்மி நகர், இந்திரா நகர், சாமியார் மடம் பகுதி வரை கானாறு செல்கிறது. இந்த காணாற்றுப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் இருப்பதால் மழை காலங்களில் சான்றோர்குப்பம், லட்சுமி நகர், சாமியார் மடம், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் வெள்ளம் புகுந்து விடுகிறது .

இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிப்படைகிறது. அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை, நீர்வளத் துறை அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அதனால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாட்டினை கானாறு மீட்பு குழு, இளைஞர்கள், விவசாயிகள் உள்பட ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பசிபிக்கில் மேலும் ஒரு படகு மீது அமெரிக்கா தாக்குதல்: 4 போ் உயிரிழப்பு

ரூ.3.14 கோடியில் மழைநீா் வடிகால் பணிகள் தீவிரம்

ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பங்குச் சந்தையில் மீண்டும் சரிவு

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT