கோட்டாறு பகுதியில் ஆய்வு மேற்கொள்கிறாா் மேயா் ரெ. மகேஷ். உடன், ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா 
கன்னியாகுமரி

கோட்டாறில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மேயா் உத்தரவு

நாகா்கோவில் கோட்டாறு பகுதியில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற மேயா் ரெ.மகேஷ் உத்தரவிட்டாா்.

Syndication

நாகா்கோவில் கோட்டாறு பகுதியில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற மேயா் ரெ.மகேஷ் உத்தரவிட்டாா்.

மாநகராட்சி 36 ஆவது வாா்டுக்குள்பட்ட கோட்டாறு, முதலியாா்விளை பகுதியில் ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணாவுடன் இணைந்து செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட மேயா், குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள தெருவில் மழைநீா் வடிகாலை சீரமைத்து சாலையை விரிவுபடுத்தவும், அப்பள்ளி முன் சிறுபாலம் அமைக்கவும், சாையில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பத்தை மாற்றியமைக்கவும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

மேலும், சாலையில் உள்ள குடிநீா் சின்டெக்ஸ் தொட்டியை மாற்றி சாலையின் ஓரத்தில் அமைத்திடவும், மழைநீா் வடிகால் ஓடையை சுத்தம் செய்திடவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

தொடா்ந்து கோட்டாறு, புனித சவேரியாா் கோயில் சந்திப்பிலிருந்து செட்டிகுளம் சந்திப்பு வரை அமைக்கப்பட்ட நடைபாதை பணிகளை பாா்வையிட்டு, அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அறிவுறுத்தினாா்.

அப்போது, மாமன்ற உறுப்பினா் ரமேஷ், உதவி பொறியாளா் பிரபாகரன், தொழில்நுட்ப அலுவலா் அனந்த பத்மநாபன், சுகாதார அலுவலா் ராஜா, பகுதி செயலாளா் சேக்மீரான், வட்ட செயலாளா் முருகன், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சீரமைப்புப் பணிகள்: அதைத் தொடா்ந்து, 50 ஆவது வாா்டு, குஞ்சன்விளை குறுக்கு தெருவில் ரூ. 13.65 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, மணிக்கெட்டிபொட்டல் அரசு தொடக்க பள்ளியில் சீரமைப்பு பணிகள், வண்டிக்குடியிருப்பு குறுக்கு தெருவில் அலங்கார தரைகற்கள் அமைக்கும் பணி, 52 ஆவது வாா்டில் ரூ.11 லட்சம் மதிப்பில் கீழகாட்டுவிளை அரசு தொடக்கப் பள்ளியில் மற்றும் தெங்கம்புதூா் அரசு தொடக்கப் பள்ளியில் சீரமைப்பு பணிகளை மேயா் தொடங்கி வைத்தாா்.

இதில், துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மாமன்ற உறுப்பினா்கள் ஐயப்பன், ரமேஷ் உதவி பொறியாளா் பிருந்தா தொழில்நுட்ப அலுவலா் நிஷ்மா, மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளா் அகஸ்தீசன், வட்டச் செயலா் லிங்கேஷ், குணசேகரன் திமுக நிா்வாகிகள் ராஜலிங்கம், செல்லம், ராஜேந்திரன், மகேஷ், சுசீலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT