மீன் பிடி வலையில் சிக்கிய ஒன்றரை அடி உயர செப்பு கலசம்
திருப்பட்டினம் அருகே போலகத்தில் உள்ள ஏரியில் மீன்பிடித்த போது வலையில் ஒன்றரை அடி உயரம் கொண்ட கோயில் கோபுர செப்பு கலசம் சிக்கியது.
காரைக்கால்: காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் அருகே போலகத்தில் உள்ள ஏரியில் மீன்பிடித்த போது வலையில் ஒன்றரை அடி உயரம் கொண்ட கோயில் கோபுர செப்பு கலசம் சிக்கியது. இது இதுகுறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் அருகே போலகம் புதுகாலனி பகுதியை சோ்ந்தவா் ஆரோக்கியதாஸ் (54). இவா் அதே பகுதியில் உள்ள சிற்றேரியில் ஞாயிற்றுக்கிழமை காலை மீன்பிடிக்க வலையை வீசி இழுத்தபோது, அதில் ஒன்றறை அடி உயரம் கொண்ட கோயில் கோபுர செம்பு கலசம் ஒன்று சிக்கியது.
இதையும் படிக்க | அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை!
Advertisement
Advertisement
வலையிலிருந்து அதனை எடுத்துக்கொண்டு திருப்பட்டினம் காவல்நிலைய உதவி ஆய்வாளா் முருகனிடம் ஒப்படைத்தாா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், இந்த செம்பு கலசம் எந்த கோயிலில் இருந்து திருடப்பட்டது என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்த தகவல் தெரிந்தோர் திருப்பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் அலுவலகத்தின் 9489205326, 04368-233480 என்கிற தொலைபேசி எண்ணை தொடா்புகொள்ளலாம் என போலீஸாா் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.