சேலம் ஓமலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ள அமைச்சர் மா. சுப்பிரமணியம், சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகள் பிரிவு, மருந்து மாத்திரைகள் வழங்கும் இடம் மற்றும் சித்த மருத்துவமனை பிரிவு, சிடி ஸ்கேன் எடுக்கும் அறை, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, ரத்த சுத்திகரிப்பு மையம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இதையும் படிக்க |எல்லை மீறும் பரிசல் ஓட்டிகள்... கூடுதல் கட்டணம் வசூலித்து காவிரி ஆற்றில் பரிசல் பயணம்!
ஆய்வின் போது சிகிச்சைக்கு வந்திருந்த மக்களிடம் மருத்துவமனையில் வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்ததுடன் தொடர்ந்து மருத்துவமனையை சிறந்த முறையில் பராமரித்து பணியாற்றும் வகையில் மருத்துவர்கள் தேவையான அறிவுரைகளை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, துணை சுகாதாரத்துறை இயக்குநர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.