கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

சென்னையில் அதி கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னையில் பெய்துவரும் கனமழை தொடர்பாக...

DIN

சென்னையில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன முதல் மிக கனமழை தொடரும் என்றும் சில பகுதிகளில் அதி கனமழை பெய்யக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் இயல்பைவிட 84 சதவிகிதம் அதிகமாக மழைப் பதிவாகியுள்ளது.

இதையும் படிக்க: சென்னையில் 5 சுரங்கப் பாதைகள் மூடல்! தற்போதைய போக்குவரத்து நிலவரம்

சென்னையில் அதி கனமழை

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக இன்று(அக். 15) காலை வலுப்பெற்றுள்ளது. மேலும், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரம் இடையே கரையை நோக்கி நகரக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், முக்கிய சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் சிவப்பு நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மஞ்சள் மோகினி... டெல்னா டேவிஸ்!

ஓவியம்... பிரியங்கா சௌத்ரி!

பாதுகாப்புத் துறை உயரதிகாரி பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக புகார்: தீவிர விசாரணை!

கம்பீரா பால விபத்து: 27 நாள்களாக அந்தரத்தில் தொங்கிய லாரி பாதுகாப்பாக மீட்பு!

Uttarakhand வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட மக்கள்! பதைபதைக்கும் காணொலி!

SCROLL FOR NEXT