ஒகேனக்கல் ஐவர் பாணி அருவியில் ஆர்பரித்து கொட்டும் தண்ணீர். 
தற்போதைய செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 18,000 கன அடியாக அதிகரிப்பு

தமிழகம், கர்நாடக மாநில காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வினாடிக்கு 18,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

DIN

தமிழகம், கர்நாடக மாநில காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வினாடிக்கு 18,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பால் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் பயணம் மேற்கொள்ள இருக்கும் விதிக்கப்பட்ட தடை மூன்றாவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் அருவியில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் பிரதான அருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.

தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாப்பாளையம், கேரட்டி, கெம்பா கரை , ராசிமணல், மொசல் மடுவு மற்றும் அதனை சுற்றியுள்ள வனப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டொல்லா நீரோடையில் வரும் நீர்வரத்து அதிகரித்த வண்ணமாக உள்ளது. இதேபோல் கர்நாடக மாநில காவிரி கரையோர வனப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக அதிகரிப்பதும்,குறைவதுமாக உள்ளது.

இந்த நிலையில், வடகிழக்கு பருவமழையால் தமிழகம்,கர்நாடக மாநில காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்கிருந்து வெளியேற்றப்படும் உபரி நீா் வரத்து காரணமாக புதன்கிழமை மீண்டும் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 18,000 கன அடி வீதம் தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து ஓகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

நீா்வரத்து அதிகரிப்பினால் ஒகேனக்கல்லின் அருவிகளான பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்தை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை மூன்றாவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் பாஜகவில் இணைவாா்கள்: மாணிக்கம் தாகூா் எம்.பி

மனைவி இருக்கும்போதே இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் வாழ்க்கை: கணவன் குத்திக் கொலை!

ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்து 164 ரன்கள் குவிப்பு; வெற்றி யாருக்கு?

கொஞ்சும் கண்கள்... ஜன்னத் ஜுபைர்!

மெழுகு டாலு நீ.... ஷிவானி நாராயணன்!

SCROLL FOR NEXT