தற்போதைய செய்திகள்

சின்னத்திரையில் நாயகனாக நடிக்கும் சினேகன்!

பாடலாசிரியர் சினேகனின் புதிய தொடர் அறிவிப்பு.

DIN

சின்னத்திரையில் பாடலாசிரியர் சினேகன் நடிக்கும் புதிய தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியரான சினேகன், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

புத்தம்புது பூவே படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான சினேகன், ஆட்டோகிராஃப் படத்தில் இடம் பெற்றிருந்த ஞாபகம் வருதே மற்றும் ராம் படத்தில் இடம் பெற்றிருந்த ஆராரிராரோ பாடல்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.

சினிமாவில் யோகி படத்தின் மூலம் நடிப்புப் பயணத்தை தொடங்கிய சினேகன், சின்னத்திரையில் சில தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரான பவித்ரா தொடரில் நாயகனாக நடிக்கிறார் சினேகன். இத்தொடரில் பிரதானப் பாத்திரத்தில் பிக் பாஸ் பிரபலம் அனிதா சம்பத் நடிக்கிறார்.

பவித்ரா தொடரின் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது. இதில், அனிதா சம்பத்தின் அம்மாவாக நடிகை கீதா நடிக்கிறார். கீதா வீட்டில் வேலை செய்பவராக சினேகன் நடிக்கிறார்.

இத்தொடர் நவம்பர் 4 ஆம் தேதி முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பவித்ரா தொடரின் முன்கதை படமாக நவ. 4 ஆம் தேதி இரவு 7 மணி முதல் 9 மணி வரை ஒளிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறாரா? நயினார் நாகேந்திரன் பதில்

கடைசி டி20: வங்கதேசத்துக்கு 118 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அயர்லாந்து!

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்! டிச. 5 வரை போக்குவரத்து மாற்றம்

தொடரும் மழை! வட சென்னை பகுதி மக்கள் பரிதவிப்பு!

சஞ்சாா் சாத்தி செயலி கட்டாயம் இல்லை! மத்திய அமைச்சர்

SCROLL FOR NEXT