அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 9 மாவட்டங்களில் மழை!
பிற்பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு.
தற்போதைய செய்திகள்அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 9 மாவட்டங்களில் மழை!
பிற்பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு அரபிக்கடலில் சனிக்கிழமை (அக்.19) காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல்சின்னம்) உருவானது. மத்திய கிழக்கு அரபிக்கடலிலும், தென்னிந்திய பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பாகிஸ்தான் பெண்ணை ஆன்லைனில் மணந்த பாஜக கவுன்சிலரின் மகன்!
இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு(பிற்பகல் 1 மணி வரை) ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.