கோப்புப்படம். 
தற்போதைய செய்திகள்

டானா புயல்: 28 ரயில்கள் ரத்து!

28 ரயில்கள் ரத்து தொடர்பாக...

DIN

டானா புயல் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட இருந்த 28 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை(அக். 23), நாளை மறுநாள்(அக். 24) மற்றும் அக். 26 ஆம் தேதி இயக்கப்பட இருந்த ரயில் சேவைகளை கிழக்கு கடற்கரை ரயில்வே ரத்து செய்துள்ளது.

வங்கக் கடலில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேற்கு வடமேற்கில் நகர்ந்து நாளை புயலாக வலுப்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிஸா மற்றும் மேற்கு வங்க கடற்கரை இடையே புரி மற்றும் சாகர் தீவுகளுக்கு நடுவே தீவிரப் புயலாக வலுப்பெற்று அக். 25 அதிகாலை கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

28 ரயில்கள் ரத்து

புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகமாக இருக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், 28 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் ரயில்களும், சென்னை, புதுச்சேரி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து மேற்கு வங்கத்திற்கு இயக்கப்படும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

காரக்பூர் - விழுப்புரம் அதிவிரைவு ரயில், ஷாலிமார் - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில், ஹௌரா - திருச்சி அதிவிரைவு ரயில் உள்ளிட்ட 28 ரயில்களின் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT