தற்போதைய செய்திகள்

பெட்ரோல் நிலையத்தில் பரபரப்பு! தீப்பிடித்து எரிந்த வேன்!

பெட்ரோல் நிலையத்தில் ஆம்னி வேன் தீப்பிடித்து எரிந்தது.

DIN

பெட்ரோல் நிலையத்திற்கு எரிவாயு நிரப்புவதற்காக சென்ற ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

கோவை உக்கடம் அருகே பெட்ரோல் மற்றும் பெட்ரோலியம் எரிவாயு நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அவ்வழியே சென்ற ஆம்னி வேன் ஒன்று கேஸ் நிரப்புவதற்காக பெட்ரோல் நிலையத்துக்கு சென்றுள்ளது. அப்போது வேனின் முன்பகுதியிலிருந்து புகை வந்ததால், உடனடியாக வாகனத்தை நிறுத்திய ஓட்டுநர், வேனில் இருந்து இறங்கி ஓடிய நிலையில், கண்ணிமைக்கும் நேரத்தில் அதிலிருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்து, வேன் முழுவதும் தீப்பிடிக்கத் தொடங்கியது.

இதையும் படிக்க: கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு: மேலும் 3 பேர் கைது!

இதனையடுத்து, அருகிலிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் வருவதற்கு முன்பாகவே வேன் முற்றிலும் எரிந்தது.

தீ விபத்து ஏற்பட்ட உடனே பெட்ரோல் நிலையத்தின் மின் இணைப்பை ஊழியர்கள் நிறுத்தியதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

பின்னர் அங்கு வந்த தியணைப்பு வீரர்கள் தீயை அணைத்ததுடன், மேலும் தீ பரவாமல் தடுத்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்பிற்கினியாள் ✨🌸... ரஷ்மிகா!

மகளிர் உலகக் கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி வங்கதேசம் அசத்தல்!

துடரும் இயக்குநரின் புதிய படம் ஆபரேஷன் கம்போடியா!

அவ தான் என்னவ... 🌹🌹😘 கௌரி கிஷன்

இந்தியா வருகிறார் தலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர்!

SCROLL FOR NEXT