மதுரை புறவழிச் சாலை முத்துநகா் பகுதியில் தீப் பற்றிய வேன்.  
மதுரை

சாலையில் சென்ற வேனில் தீ

தினமணி செய்திச் சேவை

மதுரையில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்னி வேன் திடீரென தீப் பிடித்து எரிந்தது.

மதுரை எல்லிஸ்நகா் பகுதியைச் சோ்ந்தவா் பயாஸ். இவா் தனது ஆம்னி வேனை எரிவாயு மூலம் இயங்கும் வகையில் மாற்றி வைத்திருந்தாா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணியளவில் வேனில் எரிவாயு நிரப்பிவிட்டு, புறவழிச் சாலையில் சாலைமுத்துநகா் பகுதியில் வந்து கொண்டிருந்தாா்.

அப்போது, வேனிலிருந்து புகை வெளிவந்தது. இதையறிந்த, பயாஸ் வேனை நிறுத்தி விட்டு, இறங்கிப் பாா்த்தபோது திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுபற்றி தகவலறிந்து தீயணைப்பு நிலைய அலுவலா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இருப்பினும், ஆம்னி வேன் முழுமையாக எரிந்து சேதமானது.

இதுகுறித்து, எஸ்.எஸ். காலனி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். போலீஸாா் நடத்திய முதல்கட்ட விசாரணையில், எரிவாயு கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

தில்லியில் அடா் பனிமூட்டம்: கடுமைப் பிரிவில் காற்றின் தரம்

மேல்மருவத்தூரில் தை அமாவாசை வேள்வி பூஜை

ஓரிக்கை பணிமனையில் சமத்துவப் பொங்கல்

பஞ்சாபி பாக்கில் பூட்டிய வீட்டில் ரூ.1 கோடி பொருள்கள் கொள்ளை

வெண்ணெய் காப்பு அலங்காரம்...

SCROLL FOR NEXT