சமையல் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சியில் சீதா. 
தற்போதைய செய்திகள்

சமையல் நிகழ்ச்சியில் இருந்து விலகிய நடிகை சீதா!

சமையல் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சியில் சீதாவுக்கு பதிலாக சுஜிதா.

DIN

சமையல் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சியில் இருந்து நடிகை சீதா விலகியுள்ளார்.

தற்போது சமையல் தொடர்பான நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மக்களிடையே பெரும் வரவேற்புப் பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சி 5 சீசன்கள் நிறைவடைந்துள்ளது. அதேபோல், குக் வித் கோமாளிக்கு போட்டியாக சன் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்ட டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியும் சமீபத்தில் நிறைவடைந்தது.

இதனைத் தொடர்ந்து, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சமையல் எக்ஸ்பிரஸ் என்ற புதிய சமையல் நிகழ்ச்சி கடந்த செப். 15 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி ஞாயிறுதோறும் பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

சுஜிதா

சமையல் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சியை சின்னத்திரை நடிகை ஆயிஷா தொகுத்து வழங்கிவருகிறார். நடுவர்களாக நடிகை சீதா, புதுச்சேரி இயற்கை விவசாயி கிருஷ்ணா மெக்னசி பங்கேற்று இருந்தனர்.

இந்த நிலையில், சில தனிப்பட்ட காரணங்களால் இந்நிகழ்ச்சியில் இருந்து நடிகை சீதா விலகியதாகக் கூறப்படுகிறது. சீதாவுக்கு பதில் புதிய நடுவராக சின்னத்திரை நடிகை சுஜிதா பங்கேற்றுள்ளார்.

முன்னதாக, நடிகை சுஜிதா குக் வித் கோமாளி -5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று, இரண்டாம் இடத்தைப் பிடித்தார். சமையல் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சியில் சுஜிதா பங்கேற்றுள்ளதால் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

"சென்னை வந்த உடன் முடிகொட்டுகிறதா?" காரணம் இதுதான்! | Special Interview with Dr. Karthik Raja

ஒரு பார்வை போதும்... கஜோல்!

இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும் தென்கொரிய வீரர்!

SCROLL FOR NEXT