கோவையில் நடுரோட்டில் பற்றியெரிந்த பேருந்து DOTCOM
தற்போதைய செய்திகள்

கோவையில் நடுரோட்டில் பற்றியெரிந்த பேருந்து: பயணிகள் அதிர்ச்சி

கோவையில் ஒத்தக்கால் மண்டபம் அருகே அரசுப் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் அதிர்ச்சி அடைந்த பயணிகள்

DIN

கோவையில் ஒத்தக்கால் மண்டபம் அருகே அரசுப் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் பேருந்தில் இறங்கியதால் நல்லவாய்ப்பாக அசம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை.

கோவையிலிருந்து வியாழக்கிழமை அரசுப் பேருந்து ஒன்று 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பொள்ளாச்சி நோக்கிச் சென்றது.

பேருந்து ஒத்தக்கால் மண்டபம் அருகே சென்று கொண்டிருந்த போது, இன்ஜினில் இருந்து புகை வந்துள்ளது. சுதாரித்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர்

பயணிகளை பேருந்திலிருந்து இறங்கினர். பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கிய சில நிமிடங்களில் தீ மளமளவெனப் பரவி பேருந்து முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமானது.

இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

பேருந்தில் இந்து பயணிகள் வேகமாக இறங்கியதால் நல்லவாய்ப்பாக அசம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை.

பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் திடீரென தீப்பிடித்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அண்ணன் கொலை: தம்பி, அவரது மனைவி, மகனுக்கு ஆயுள் சிறை

கல்வராயன்மலையில் 750 கிலோ வெல்லம், துப்பாக்கி பறிமுதல்!

லாரி மோதியதில் விவசாயி உயிரிழப்பு

10-ஆம் வகுப்பு தோ்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்: செப்டம்பா் 3- இல் பெறலாம்

அரசுப் பேருந்து மோதி தறி பட்டறை உரிமையாளா் பலி!

SCROLL FOR NEXT