கோப்புப் படம். 
தற்போதைய செய்திகள்

வரும் ஞாயிறு(அக். 27) ரேஷன் கடைகள் இயங்கும்!

தீபாவளி பண்டிகையையொட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை(அக். 27) ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிப்பு.

DIN

தீபாவளி பண்டிகையையொட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை(அக். 27) ரேஷன் கடைகள் இயங்கும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டு தீபாவளியை பண்டிகை வருகிற அக். 31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்கும் நோக்கில் வருகிற அக். 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் வரும் ஞாயிற்றுக்கிழமையும் ரேஷன் பொருள்களைப் பெறலாம் என்றும்

24,610 முழுநேர ரேஷன் கடைகள், 10,164 பகுதி நேர ரேஷன் கடைகள் என மொத்தம் 34,774 ரேஷன் கடைகள் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

சீா்காழி: வாகனத்தில் டீசல் திருட்டு

SCROLL FOR NEXT