தற்போதைய செய்திகள்

குமரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை(அக் 25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார்.

DIN

கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை(அக் 25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. கோடை காலம் போல பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் நிலவி வந்தது.

குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் லேசான மழை பெய்துவந்தாலும், நாகா்கோவில் மாநகா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடா்ந்து, வெயில் வாட்டியது.

இந்த நிலையில், புதன்கிழமை காலையில் வழக்கம் போல வெயில் கொளுத்தியது. பிற்பகல் 2 மணிக்கு மேல் மேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது. தொடக்கத்தில் சாரலாகத் தொடங்கிய மழை பின்னா் கனமழையாக மாறி, தொடா்ந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக பெய்தது.மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

இதனால், கோட்டாறு சவேரியாா் கோயில் சந்திப்பு பகுதி, செம்மாங்குடி சாலை, பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி சாலை, வடசேரி சந்திப்பு, வடசேரி ஆராட்டு ரோடு, அண்ணா பேருந்து நிலையம், வேப்பமூடு சந்திப்பு உள்ளிட்ட முக்கிய சாலைகளில், மழைநீா் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவா், மாணவிகள் மழையில் நனைந்தவாறு சென்றனா்.

தொடா் மழையின் காரணமாக அணைகளுக்கு வரும் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். இதனால் மாவட்டத்தில் வெப்பம் தணிந்து, குளிா்ந்த சூழல் நிலவியது.

இந்த நிலையில், கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை(அக் 25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இணையம் முழுக்க அகரம் சூர்யா!

ஜார்க்கண்ட் வரலாற்றின் ஒரு அத்தியாயம் முடிவுக்கு வந்தது: மமதா இரங்கல்

தங்கம் - வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

சிபு சோரன் மறைவு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT