தேவர் உருவப் படத்திற்கு விஜய் மரியாதை
தேவர் பிறந்தநாள் மற்றும் குருபூஜைக்கு மரியாதை செலுத்திய விஜய்.
முத்துராமலிங்கத் தேவரின் உருவப் படத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மலர் தூவி மரியாதை மரியாதை செலுத்தினார்.
தேவர் திருமகனாரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை தினத்தையொட்டி, தவெக கட்சி அலுவலகத்தில் உள்ள தேவரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையும் படிக்க: தேவர் குருபூஜை: பிரதமர் வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவு!
இது தொடர்பாக விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார். இந்திய விடுதலைக்காகக் காத்திரமாகக் களமாடியவர். மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படையை வலுப்படுத்தத் துணை நின்றவர்.
நாடாளுமன்ற, சட்டமன்ற அரசியலில் முத்திரை பதித்த பேச்சுக் கலைப் பேரரசர். சமூக நல்லிணக்கம் பேணியவர். தமிழக அரசியலின் முக்கிய அடையாளங்களில் ஒருவராகவும் மாறிய, மகத்தான மனிதரை அவரது குருபூஜைத் திருநாளில் வணங்கி வாழ்த்திப் போற்றுவோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.