குழந்தைகளுக்கு பட்டாசு கிப்ட் பாக்ஸ்களை வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார் புதுச்சேரி முதல்வர் ந.ரங்கசாமி.  
தற்போதைய செய்திகள்

குழந்தைகளுக்கு பட்டாசு வழங்கி தீபாவளி வாழ்த்து சொன்ன முதல்வர் ரங்கசாமி

தீபாவளி பண்டிகையையொட்டி, குழந்தைகளுக்கு மகிழ்வுடன் பட்டாசு கிப்ட் பாக்ஸ்களை வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார் புதுச்சேரி முதல்வர் ந.ரங்கசாமி.

DIN

புதுச்சேரி: தீபாவளி பண்டிகையையொட்டி, குழந்தைகளுக்கு மகிழ்வுடன் பட்டாசு கிப்ட் பாக்ஸ்களை வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார் புதுச்சேரி முதல்வர் ந.ரங்கசாமி. குழந்தைகள் நீண்ட வரிசையில் காத்திருந்து பட்டாசுகள் பெட்டிகளை வாங்கிச் சென்றனர்.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் மீது அதிக அன்பு கொண்டுள்ள புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது தனது வீட்டின் அருகில் வசிக்கும் குழந்தைகளை தனது வீட்டிற்கு அழைத்து பட்டாசு கிப்ட் பாக்ஸ்களை வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தீபாவளி பண்டிகையையொட்டி இன்று(அக்.31) தனது வீட்டின் அருகில் வசிக்கும் குழந்தைகளுக்கு மகிழ்சியுடன் பட்டாசு கிப்ட் பாக்ஸ்களை முதல்வர் ரங்கசாமி வழங்கினார். இவற்றை வாங்க அவரது வீட்டின் அருகில் வசிக்கும் ஏராளமான குழந்தைகள் நீண்ட வரிசையில் காத்திருந்து மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர். முதல்வர் ரங்கசாமியும் சலிக்காமல் நீண்ட நேரம் காத்திருந்து குழந்தைகள் அனைவருக்கும் தனது கையால் பட்டாசுகளை வழங்கி தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெற்றி உரையில் நேருவின் பேச்சை மேற்கோள்காட்டிய நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி!

பிலாஸ்பூரில் சரக்கு ரயில்- பயணிகள் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு, 20 பேர் காயம்

பெண் தொழிலாளிகளின் குளியலறையில் ரகசிய கேமரா! வடமாநில இளம்பெண் கைது!

நான்கரை மணிநேரம், 100 காவலர்கள்... மாணவியைக் கண்டுபிடிக்காதது ஏன்? இபிஎஸ் கேள்வி

ஆளுங்கட்சி உறுப்பினரின் குடும்பத்தினர் மூவர் சடலமாக மீட்பு! போலீஸார் விசாரணை

SCROLL FOR NEXT